5 வயது : 46 வினாடி 99 தமிழ் பூக்கள் பெயர் : சாதனை படைத்த சிறுவன்!!
46 வினாடிகளில் 99 தமிழ் பூக்கள் பெயரைச் சொல்லி சாதனை படைத்த ஐந்து வயது மாணவன்.
திண்டுக்கல் கோவிந்தாபுரம் பகுதியில் வசித்து வருபவர் மாரிச்சாமி.
இவரது ஐந்து வயது மகன் பிரவீன் பிரணவ் இவன் இப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறான்.
இவன் தமிழ் குறிஞ்சிப் பாட்டில் வரும் காந்தள், ஆம்பல், அனிச்சம், குவளை, குறிஞ்சி உள்ளிட்ட 99 பூக்களின் பெயர்களை வெறும் 46 வினாடிகளில் மனப்பாடமாக சொல்லி இந்தியாவின் சாதனை புத்தகமான இந்தியா புக் ஆஃ ரெக்கார்டில் இடம்பிடித்துள்ளார்.
இதற்கு முன்னதாக 7 வயது சிறுவன் 39 வினாடிகளில் 105 பூக்களின் பெயர்களை மனப்பாடமாக சொன்னது சாதனையாக இருந்தது. தற்பொழுது 5 வயது சிறுவன் பிரவீன்பிரணவ் நாற்பத்தி ஆறு வினாடிகளில் கூறியது சாதனையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அச்சிறுவனுக்கு இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டின் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.சாதனை படைத்த அச்சிறுவனுக்கு பள்ளியின் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது
செய்திகள் : ரியாஸ், திண்டுக்கல்