துடிதுடித்து இறந்த ஒட்டகச்சிவிங்கிகள் : உலகையே பதறவைத்த புகைப்படம்!!!
கென்யாவின் ஏற்பட்டுள்ள வறட்சியால் அந்நாட்டின் உயிரினங்களின் பாதிப்பை காண்பிக்கும் நெஞ்சை பதற வைக்கும் புகைப்படமாக தற்போது அங்குள்ள ஒட்டகச்சிவிங்கி உயிரிழந்த புகைப்படம் பதறுகிறது. சபுலி வனவிலங்கு பாதுகாப்பு மையத்திற்குள் ஆறு ஒட்டகச்சிவிங்கிகள் இறந்து கிடக்கும் புகைப்படம் தான் அது.
மண்ணுக்குள் பாதி உடல் புதைத்த இடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக இந்த ஒட்டகச் சிவிங்கிகள் உயிரை விட்ட பரிதாபம் நிகழ்ந்திருக்கிறது.உணவு மற்றும் தண்ணீரின்றி பலவீனமான ஒட்டகச்சிவிங்கிகள், “அருகிலுள்ள ஏறக்குறைய வறண்டு போன நீர்த்தேக்கத்தில் இருந்து குடிக்க முயன்றபோது சேற்றில் சிக்கி” இறந்த பிறகு இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
செப்டம்பரில் இருந்து கென்யாவின் வடக்கின் பெரும்பகுதி சாதாரண மழைப்பொழிவில் 30 சதவீதத்திற்கும் குறைவாகவே பெய்துள்ளது, இதனால் அப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுகிறது. மழையின்மை இப்பகுதியில் உள்ள வனவிலங்குகளில் பேரழிவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது அதோடுமட்டுமல்லாமல் உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறையை அதிகரித்துள்ளது.
மேய்ச்சல் சமூகங்கள் மற்றும் அவர்களின் கால்நடைகளை விளிம்பிற்கு தள்ளுகிறது, ஆனால் காட்டு விலங்குகள் மிகவும் ஆபத்தில் உள்ளன என்று கூறுகிறார். வறட்சியின் காரணமாக அருகிலுள்ள கரிசா மாவட்டத்தில் 4,000 ஒட்டகச்சிவிங்கிகள் அழிந்துபோகும் அபாயத்தில் இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
கென்யா ஜனாதிபதி உஹுரு கென்யாட்டா செப்டம்பர் மாதம் வறட்சியை தேசிய பேரிடராக அறிவித்தார். இதற்கிடையில், கென்யாவின் தேசிய வறட்சி மேலாண்மை ஆணையம் கடந்த வாரம் வறட்சியால் பாதிக்கப்பட்ட 2.5 மில்லியன் மக்களுக்கு அவசர நிவாரணப் பணப் பரிமாற்றத் திட்டத்தை அறிவித்தது.
இறந்து கிடக்கும் புகைப்படம் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது ஒட்டகச்சிவிங்கி களைக் காப்பாற்ற உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என விலங்கின ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.