பகத்சிங்காக மாறிய அஜித் : பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரசிகர்கள் போஸ்டர்…..
நடிகர் அஜித்தை பகத்சிங் போல சித்தரித்து மதுரையில் ரசிகர்கள் ஒட்டியிருக்கும் போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக நடிகர் அஜித் திகழ்ந்து வருகிறார். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வருகின்ற 2022 பொங்கலன்று வெளியிடப்படும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், வலிமை திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.நடிகர் அஜித்க்கு மதுரையில் வெறித்தனமான ரசிகர்கள் அதிகம். அதனை மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்தியுள்ளனர் அவரது ரசிகர்கள்.
மதுரையின் அடங்காத அஜித் குரூப்ஸ் என்ற பெயரில் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி உள்ளனர். அதில், அஜித்தை புகழும் வகையில், வருடங்கள் கடந்தாலும் வலிமையும் வரலாறும் அழியாது என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. மேலும் நடிகர் அஜீத்தின் உருவத்தை சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் போல சித்தரித்துள்ளனர்.
இந்த சுவரொட்டி மதுரையின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளது, சமீபத்தில் நடிகர் விஜய் சுதந்திரப் போராட்ட வீரர்கள், அரசியல் தலைவர்கள் போல தனது படத்தை சித்தரித்து வெளியிட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்திருந்தார். நடிகர் அஜித்தும் இதுபோன்ற விஷயங்களை விரும்பாத நிலையிலும் ரசிகர்கள் இவ்வாறு போஸ்டர் ஒட்டியுள்ளனர் அவரது ரசிகர்கள்.