செய்திகள்

பொங்கல் பரிசுத் தொகுப்பு பணி நாளை துவக்கம்

பொங்கல் பரிசுத் தொகுப்பு பணி நாளை துவக்கம்…..

பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டம் வழங்கும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலினை நாளை தொடங்கிவைக்கிறார் .

தமிழகத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு வழங்க முதல்வர் உத்தரவிட்டார் .

இந்த நிலையில் , நாளை முதல் நியாயவிலைக் கடைகளில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட உள்ளது . அதற்கு முன்னதாக சென்னை தலைமைச் செயலகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார் .

தகுதிவாய்ந்த அனைவருக்கும் சிறப்பு தொகுப்பு தரமான பொருட்களாக வழங்கப்பட வேண்டும் எனவும் , திட்டத்தை ஒருங்கிணைந்து திறம்பட செயல்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது .

21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு 2,15,48,060 குடும்பங்களுக்கு மொத்தம் 1,088 கோடி ரூபாய் செலவில் வழங்கப்பட உள்ளது . பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் கடந்த 2 நாட்களாக நடைப்பெற்று வருகிறது .

இந்த நிலையில் , பொங்கல் பரிசுத் தொகுப்பினை இடைவிடாமல் தொடர்ந்து விநியோகம் செய்திட ஏதுவாக , நியாய விலைக் கடைகளுக்கான விடுமுறை தினம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது . அதன்படி , ஜனவரி 7 ஆம் தேதியன்று அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button