மயிலாடுதுறை அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் பலி. மயிலாடுதுறை போலீசார் விசாரணை..
மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை அழகியநாதர் கோவில் தெருவை சேர்ந்தவர் பெயின்டர் மணி. இவருக்கு 2மகன்கள் உள்ளனர்.
11ம் வகுப்பு படிக்கும் யுவராஜ் (15) தனது தம்பி விஜயேந்திரன் மற்றும் நண்பர்களுடன் ஆனந்தக்குடி கிரா மத்தில் உள்ள சிவன் கோயில் குளத்தில் குளித்து உள்ளனர். குளத்தில் நீச்சலடித்து விளையாடிக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி யுவராஜ் தத்தளித்துள்ளார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்க முயன்றும் முடியாததால் மயிலாடுதுறை தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அதனை அடுத்து தீயணைப்புத் துறை அலுவலர் முத்து குமார் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அரைமணிநேரம் போராடி யுவராஜை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் யுவராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். யுவராஜ் உடல் பிரேத பரிசோதனைக்காக சவக்கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இதுகுறித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பள்ளி மாணவன் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கிராமத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.