குப்பை போடும் இடமாக மாறி வருகிறது குற்றாலம் நீர்நிலைப் பகுதிகளில் வணிகம் நடத்தும் ஒரு சில வணிகர்கள் குப்பைகள் முழுவதும் ஆற்றுக்குள் கொட்டும் அவலம் நிலை குற்றாலம் அருகே உள்ள காசிமேஜர்புரம் இலஞ்சி குமரன் க்கோவில் ஆற்று பாலம் போன்ற பகுதிகளில் இப்போது மக்கள் குளித்து வருகின்றனர் ஆனால் குற்றாலம் சிற்றாறு பகுதிகளில் கழிவு குப்பைகளை கொட்டப்பட்டு வருகிறது அப்பகுதியில் வணிக நடத்தும் ஒரு சில நபரிடம் விசாரி என்ன செய்யும் பொழுது நாங்கள் கடை வைத்திருக்கும் போதே குற்றாலநாதர் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பகுதி குற்றாலம் பேரூராட்சி சார்பாக குப்பைகளை சேகரிப்பதற்கு இங்கே ஆட்கள் வருவது கிடையாது. திருக்கோவில் பணியாளரும் இங்கே ஒருவர் மட்டும்தான் செயல்படுகிறார் இதற்கு முன் திருக்கோவிலிலிருந்து குப்பையை சேகரிப்பதற்கு இரண்டு வண்டிகள் உண்டு ஆனால் எதுவும் தற்போது வருவது கிடையாது அதனால் குப்பைகள் அதிகமாக சேகரிக்கும் போது இரவு நேரங்களில் ஆற்றுக்குள் கொட்டப்படுகிறது என தகவல் வருகிறது சுகாதாரத்தை பேணும் விதமாக தமிழக அரசு பல்வேறு தொலைநோக்குப் பார்வையின் கீழ் குற்றாலம் சுற்றுலாத்துறை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது ஆனால் இப்படி முகம் சுளிக்கும் வகையில் குற்றாலம் அருவி கரை பகுதிகளில் குப்பைகளை போடும் இடமாக இருக்கிறது மிகுந்த வருத்தம் அளிக்கிறது செயல் மாண்புமிகு நீதியரசர் கிருபாகரன் உத்தரவின்படி செயல்படுத்தப்படுமா?
விசில் செய்திளுக்காக வீரமணி