சுற்றுலாசெய்திகள்

குற்றாலம் கும்மாளம் குளியல் அரசு வாகனத்தை பயன்படுத்தும் அரசு அதிகாரிகள்!

தென்காசி மாவட்டம் புகழ்மிக்க பழமையான ஊர் ஆயிரமாவது ஆண்டின் சதாபிஷேகம் காணும் ஊரான சங்கரன்கோவிலில் இப்படி ஒரு அதிகாரியா? என கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சங்கரன்கோவில் பகுதியில் சமூக வனவியல் மற்றும் விரிவாக்கம் சரக அலுவலராக பணியாற்றி வரும் அதிகாரம் மிக்க எவருக்கும் அஞ்சாமல் பயணித்து வரும் அதிகாரி தான் ராஜகோபாலன் கடந்த தினம் 29/8/2022. அன்றுTN72.G1229 என்ற அரசு என் பதிவு கொண்ட வாகனத்தில் முக்கிய அலுவலகம் செல்ல வேண்டும் அலுவலகத்தில் ஓட்டுநராக பணி புரியும் அருண்குமாரிடம் வாகனத்தை எடுத்து வரச் சொல்லி இருக்கிறார் அருண்குமார் அவர்களும் உயர் அதிகாரிகளை உத்தரவை மதித்து வாகனத்தை எடுத்து வந்திருக்கிறார் வானொலிவியாக அதிகாரம் படைத்த ராஜகோபாலன் என்பவர் நான் சொல்கின்ற இடத்தில் சென்று மூன்று பெண்கள் இருப்பார்கள் வண்டியில் ஏற்றி வா என்று உத்தரவு பிறப்பித்து இருக்கிறார் ஆனால் ஓட்டுனர் அருண்குமார் ஐயா இது அரசு வாகனம் இதுபோன்று செய்தால் எனக்கு பிரச்சனை வந்துவிடும் என்று நான் போக மாட்டேன் என்று மறுத்திருக்கிறார்… நான் உயர் அதிகாரி சொல்கிறேன் என்னிடமே எதிர்த்து பேசுகிறாயா உன்னை தொலைத்து விடுவேன் என்று காட்டமாக பேசியிருக்கிறார் ராஜகோபாலன்.. வேற வழி இல்லாமல் அருண்குமார் அவர்கள் மூன்று பெண்களை ஏற்றி வந்திருக்கிறார் அரசு வாகனத்தில் உயர் அதிகாரியை உத்தரவு மதிக்க வேண்டும் என்று உனக்கு ட்ரெய்னிங்கில் சொல்லித் தரவில்லையா என பேசி இருக்கிறார். ஓட்டுனர் அருண்குமார் கண்ணீர் சிந்தினபடி இவ்வளவு வார்த்தைகளை நாம் ஏன் கேட்க வேண்டும் என்று பதிலுக்கும் அதிகாரியிடம் முறையிட்டு இருக்கிறார் பிறகு வண்டியில் வந்திருந்த மூன்று பெண்களும் டிரைவரை சமாதானம் செய்திருக்கின்றனர் உயர் அதிகாரிகளோ வண்டியை நேராக குற்றாலத்திற்கு விடு என்று சொல்லியிருக்கிறார் நீங்கள் உல்லாச பயணம் செய்வதற்கு அரசு வண்டி தான் உங்களுக்கு கிடைத்ததா என்று அருண்குமார் அவர்கள் பேசியிருக்கிறார் ஐயா இது போன்ற காரியங்களுக்கு அரசு வண்டியில் பயணம் செய்த செய்யலாமா ?நான் பணிவோடு கேட்கிறேன் நாளைக்கு எனக்கு ஏதாவது பிரச்சனை வந்துவிடும் என்று பேசி இருக்கிறார் மீண்டும் கேள்வி எழுப்பின ஓட்டுநரை நான் சொன்னபடி கேள் இல்லையென்றால் உன்னை வேறு இடத்திற்கு மாற்றி விடுவேன் என அதிகாரி மிரட்டி உள்ளார் டிரைவரோ …சரி என்று உயர் அதிகாரிகள் உத்தரவின்படி உல்லாச பயணம் குற்றாலம் புலி அருவி சில ஹோட்டலுக்கு சென்று இருக்கிறார்கள் ஒரு வாரம் உனக்கு டைம் தருகிறேன் எங்கேயாவது ஓடிவிடு இல்லையென்றால் வனத்துறை உயரதிகாரி டி எஃப் ஓ அலுவலகங்களிடம் உன்னைப் பற்றி புகார் அனுப்பி விடுவேன் உன் வேலையை தொலைத்து விடுவேன் என்று மிரட்டி உள்ளார் உல்லாச பயணம் அரசு வண்டியில் பயணமா என கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர் யார் இந்த ராஜகோபாலன் வனத்துறையில் அதிகாரம் மிக்கவரா..? இவர் என கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள் சொந்த பயன்பாட்டிற்கு அரசு வாகனத்தில் உல்லாச பணம் செய்த அரசு வாகனத்தை துஷ்பிரயோகம் செய்த வனத்துறை அதிகாரி ராஜகோபாலன் மீது விசாரணை நடத்தப்படுமா என உள்ளூர்வாசிகளும் சமூக ஆர்வலரும் கேள்வி எழுப்புகின்றனர் ஏற்கனவே இதற்கு முன் கன்னியாகுமரி பகுதியில் பல்வேறு குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர்தான் இவர் என சொல்கின்றனர் இதுபோன்ற தவறு செய்யும் அரசு வனத்துறை அலுவலர்மீது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்….

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button