இன்று முடிவுக்கு வருகிறது ஏழு நாட்கள் தொடர் போராட்டம் பிணத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என நீதிமன்றம் எச்சரிக்கைக்கு பின்னரே..
தென்காசி போலீசார் மட்டுமல்ல பக்கத்து மாவட்ட போலீசாரும் நிம்மதி அடைந்தனர் ஏழு நாட்களும் தொடர் பாதுகாப்பு
இரவும் பகலும் மாறி மாறிப்போனது
அதில் தூக்கமும் தொலைந்து போனது
அரியநாயகிபுரம் பள்ளி மாணவன் சீனு தமது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்
என்ற செய்தி கேட்டதும் பெற்றவர்களைவிட போலீசார் தான் பதற்றமடைந்தனர்
மாணவன் இறப்பிற்க்கு காரணம் அவன் பயிலும் பள்ளியா அல்லது பெற்றோர்களின் வசைபாடா ஆசிரியர்களின் அதட்டலா என ஆயிரம் கோணத்திலும் விசாரணை துவக்கினர்
போலீசார்
கூடுதலாக சிபிசிஐடி போலீசாரும் இந்த வழக்கை பிசிர் தட்டாமல் மிக நேர்த்தியாக விசாரணை செய்து வருகின்றனர்
இந்நிலையில் மாணவன் சீனுவின் செல்போனில் என்ன இருந்தது என்பது பெற்றோர்களுக்கும் காவல் துறையினருக்கும் மட்டுமே தெரியும் ..(அதனை விசாரணைக்கே விட்டு விடுவோம்)
குற்றத்திற்கு யார் பொறுப்பு என்று ஆராய்ந்தால் அது யாராக இருந்தாலும் தண்டிக்கபட வேண்டும் என்பதில் போலீசார் உறுதியாக உள்ளனர்
சில அமைப்புகள் என்ன நடந்தது என தெரியாமல் குளிர்காயவும் அரசியல் செய்து சுயவிளம்பரத்திற்க்காகவும் பிணத்தை வாங்க விடாமல் முட்டுகட்டை போட்டு வந்தனர்
மாவட்ட ரீதியான பாதுகாப்பு பணி காவல்நிலைய வழக்குகள் தொடர்பான விசாரணை உள்ளூர் பாதுகாப்பு பணி தீபாவளி முன் கள பாதுகாப்பு பணி அனைத்தையும் தொய்வில்லாமல் தசவதாரம் போன்று காத்து வந்த போலீசார் களைத்து போய் இருந்தனர்
இருந்தாலும் சீனுவின் உயிரை தமது உயிர் என பரிவோடுதான் பார்த்து வந்தனர்
இதில் இடையூறு செய்ய வந்த வெளியூர் அமைப்புகளோ போலீசாரின் விடாபிடி பாதுகாப்பு பணியினால் சுய நினைவு இழந்தவர்கள் போன்று காவல்நிலையத்தை கொளுத்த வேண்டும் பொது சொத்திற்க்கு பங்கம் விளைவிக்க வேண்டும் என உறுதி மொழி எடுத்தவர்கள் ஒரு படி மேலே போய் பணிக்கு வந்த பெண் ஆய்வாளர் மீது வாகனத்தை வைத்து ஏற்றி கொல்லவும் முயற்சி செய்தனர்
இதனையும் தாங்கி கொண்டு நீதிமன்றத்தின் மீதுள்ள நம்பிக்கையும் தமது சக காவலர்கள் மீதுள்ள அசைக்க முடியா நம்பிக்கையிம் பற்றுதலுமே எஸ்பியின்
தன்னம்பிக்கையும் தான் இன்று நீதிமன்றம் சரியான சாட்டையடி கொடுத்துள்ளது
சங்கரன்கோவில் டிஎஸ்பிக்கு இது புது அனுபவத்தை தந்துள்ளது அவரை பாராட்டியே ஆகவேண்டிம் கள பணியில் அவரை பார்த்து வியப்படைந்தவர்களில் பட்டியலில் நாங்களும் உண்டு
தீபாவளியற்று கொடுக்கபடும் பரிசு பொருட்களை விட ஆனந்தமாக உள்ளது இந்த நீதி மன்றத்தின் ஆனை
அனைத்து காவலர்களுக்கும் இந்த தீபாவளி பரிசால்
நிம்மதி பெருமூச்சி அடைந்துள்ளனர்
இன்று சீனுவின் உடல் அடக்கம் செய்யபடுகிறது இன்றோடு பிணத்தை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகளின் செயலுக்கு முற்றுபுள்ளி வைப்போம் அன்னைத்து கள பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கும் விசில் தீபாவளி வாழ்த்துக்கள்🌷🌷🌷🍫🍫
விசில்