
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல்செங்கம் குப்புசாமி நகரைச் சேர்ந்தவர் முருகன் மகன்கள் சக்திவேல் (21), மணிகண்டன் (19). இவர்களிடையே, உறவினர் பெண்ணை யார் திருமணம் செய்வது என தகராறு இருந்து வந்ததாம்.இந்த நிலையில், இருவரிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாம். அப்போது, கோபமடைந்த சக்திவேல் கத்தியால் மணிகண்டனை குத்தி கொலை செய்தார். இதுகுறித்து, மேல்செங்கம் போலீஸார் வழக்குப் பதிந்து சக்திவேலை கைது செய்தனர்.