பாபநாசம் 3ம் கட்ட தூர்வாரும் தூய்மைப் பணி செய்தபோது நெஞ்சை நெகிழ வைத்த சம்பவம். பரிகாரம் முடித்து பக்தர்கள் தம் ஆடைகளை நீரில் போட்டபோது ஒரு பேண்டில் , நீரை சுத்தம் செய்யும் ஆமை அதன் உள்ளே புகுந்து, வெளியே வரத் தெரியாமல் அப்படியே இறந்துபோன காட்சியைத்தான் நீங்கள் பார்க்கிறீர்கள். துணிகள் சுற்றி நம் நதியில் மனிதர்கள்தான் இறக்கிறார்கள் என்றால் அப்பாவி ஆமைகள் போன்ற நீர்வாழ் உயிரினங்களும் நீரில் கிடக்கும் துணிகளால் இறந்து வருகின்றன. கொடுமைதான். இப்படி நிறைய பாம்பு மீன் என துணிகளால் செத்துகிடக்கின்றன. நீரைச் சுத்தம் செய்யும் இவைகள் இப்படியே மாண்டுபோனால் நீர் எப்படி சுத்தமாகும்? இன்னும் சில ஆண்டுகளில் தாமிரபரணியின் தன்மை மாறி நீர் விஷமாகும் காலம் வெகுதூரத்தில் இல்லை.
