🐘திருப்பத்தூர் ஏலகிரி மலையில் 2 காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளதால் ஜலகம்பரை நீர்வீழ்ச்சி மறு அறிவிப்பு வரும் வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என DFO.நாகசதீஷ் கிடிஜாலா தகவல்…!
திருப்பத்தூரில் ஏலகிரிமலையில் உள்ள அட்டாறு நதி சடையனூர் என்னுமிடத்தில் 15 மீட்டர் உயரத்தில் இருந்து அருவியாகக் கொட்டுகிறது.மலையில் காணப்படும் பல்வேறு வகையான மூலிகைத் தாவரங்கள் ஊடாக நதி வருவதால் அருவியில் நீராடுவது நோய்களை நீக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு. நீர்வீழ்ச்சியின் அருகில் முருகன் கோயில் உள்ளது இதைப் பார்ப்பதற்கு பல்வேறு பகுதியில் இருந்து பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் வருகிறனர் இந்த நிலையில் இரண்டு காட்டு யானைகள் அந்த பகுதியில் முகாம் இட்டு வருவதால் வன உயிரினங்கள் நலன் கருதியும் பொதுமக்கள் நலன் கருதியும் ஜலகம்பரை நீர்வீழ்ச்சி மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை எனவும் காட்டு யானை விரட்டும் பணியில். வருவாய்த் துறையினர் காவல் துறையினர் இணைந்து திருப்பத்தூர் குடியாத்தம் வாணியம்பாடி 5 வனசரகர்கள் உட்பட. 60க்கும் மேற்பட்ட வனபணியாளர்கள் காட்டு யானைகள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றன . பொதுமக்கள் காட்டு யானைகளை பின்தொடர்ந்து செல்ல வேண்டாம் தங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் வேலூர் வன பாதுகாவலர் சுஜாதா அறிவுறுத்தலின் பேரில் திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் நாகசதீஷ் கிடிஜாலா அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.!
🌳 கே தமிழகம் சேட் ✍️