குடிநீர் குழாயினை திருடி பாதி விலைக்கு விற்ற பஞ்சாயத்து தலைவியின் கணவர்
மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தென்காசி மாவட்டம் கடையம் பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் முத்துலட்சுமி இவரது கணவர் ராமதுரைஇவர் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவராவார் கடையம் பஞ்சாயத்து நிர்வாகத்திலும் கூட்ட அரங்கிலும் தலையிட்டு முகம் சுழிக்க வைக்கிறார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது இந்நிலையில் பஞ்சாயத்து நிர்வாகத்திற்க்கு சொந்தமான இரும்பு குழாய்களை திருடி பழைய இரும்பு கடைகளில் பாதி விலைக்கு விற்றுவிட்டதாக எழுந்த குற்றசாட்டு தொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் கடையம் பஞ்சாயத்து துனை தலைவர் மகாலிங்கம் புகார் கொடுக்கபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது விசில் செய்தியின் சிறப்பு குழு