ராதா சுரேஷ்
திருப்பதி
ஆந்திர மாநிலம்
01.05.2023
பட்டாசுக் கிடங்கில் விபத்து
திருப்பதி மாவட்டம் வரடதய்யபாலேம் மண்டலம் சத்யவேடு கிராமத்தில் உள்ள சிவாரு என்ற இடத்தில் இருந்த பட்டாசு க்கிடங்கில் பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டது. விபத்தில் நாகேந்திரன், ஏடுகொண்டலு, சங்கர் ஆகிய
மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதில் பலத்த காயமடைந்த கல்யாண், வீரையா ஆகியோர் ஸ்ரீகாளஹஸ்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தினர்.சமபவம் குறித்து வரத்யயபாலேம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்