தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அரசின் திட்டங்கள் பயன் பெற வேண்டி மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் 06.06.2023 அன்று காலை 11:00 மணிக்கு நடைப்பெறவுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் தென்காசி மாவட்டத்ததை சார்ந்த அனைத்து வகையான அனைவரும் தங்களுக்கு தேவையான மாற்றுத்திறனாளிகள் உதவிகள் பெற மாற்றுதிறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை-நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை-நகல், வாக்காளர் அட்டை-நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பித்து பயன் பெற வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.துரைரவிச்சந்திரன் இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.