ராதா சுரேஷ்
திருப்பதி
ஆந்திர மாநிலம்
03.06.2023
தங்கச் சங்கிலியில் ஸ்ரீநிவாஸர் தாயார் பெரிய டாலர் அணிந்து சாமி தரிசனம் செய்த மத்தியபிரதேச பக்தர் குடும்பம்
பெருமாளின் மீதான வினோத பக்தியை கண்டு அதிசயித்த சக பக்தர்கள்
மத்தியப் பிரதேச மாநிலம் ரட்லம் பகுதியைச் சேர்ந்த சோனி நானுராம் தயராம்
பக்தர் திருமலைக்கு தனது குடும்ப உறுப்பினர்களுடன் சாமி தரிசனம் செய்ய வந்தார்.
ஏழுமலையானின் மீதுள்ள அபார பக்தியை பறைசாற்றும் விதமாக அவரும் அவரது குடுமபத்தாரும் பெருமாள் தயார்கள் உருவம் பொறித்த மிகப்பெரிய டாலர் செயின் அணிந்து வந்து சாமி தரிசனம் செய்தனர். சாமி தரிசனம் முடிந்து கோவிலில் இருந்து தயாராம் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியே வந்தபோது, அவர்களின் சங்கிலியில் இருந்தன பெருமாள் மற்றும் தாயர்களின் டாலர்களைக் கண்ட சக பக்தர்களை மிகவும் கவர்ந்தது.அத்தகைய பெரிய லாக்கெட்டுகளும் உள்ளனவா என்று அவர்கள் ஆச்சர்யமடைந்தனர்.