தென்காசி மாவட்டத்தில் அமைக்கப்பட்ட ஐந்து மையங்கள் உட்பட 500 நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
அதன்படி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட காவிரி நகர் நகர்ப்புற நல்வாழ்வு மையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள், மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் காணொலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டணர்.
சங்கரன்கோவில் காவேரி நகர் தென்காசி மங்கம்மாள் சாலை மேல கடையநல்லூர் இந்திரா நகர் முத்துகிருஷ்ணாபுரம் குமாந்தபுரம் மற்றும் புளியங்குடி அய்யாபுரம் ஆகியவற்றில் 1.25 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற நல்வாழ்வு மையங்களில் ஒரு மருத்துவர் ஒரு செவிலியர் ஒரு சுகாதார ஆய்வாளர் மற்றும் துணைப்பணியாளர் ஆகியோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 8:00 மணி வரையிலும் செயல்படும்.
மேலும் இந்த மையங்களில் அத்தியாவசிய மருத்துவ சேவைகள் பரிசோதனைகள் மற்றும் தடுப்பூசி பணிகளும் வழங்கப்படும் நோயாளிகள் மருத்துவர்களை காணொலி மூலம் தொடர்பு கொண்டு சிகிச்சை பெறலாம் எனவே இந்த மருத்துவ சேவையை பயன்படுத்தும் மக்கள் நலம் பெறலாம் என திரு.துரை. ரவிச்சந்திரன் இ.ஆ.ப.அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் நான்கு கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டசத்து பெட்டகம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் திரு.தனுஷ் எம்.குமார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திரு.ராஜா, சங்கரன்கோயில் நகராட்சி ஆணையர் திரு.சபாநாயகம், நகர்மன்ற தலைவர் திருமதி.உமா மகேஸ்வரி, ஒன்றிய பெருந்தலைவர் திரு.லாலா சங்கரபாண்டியன், துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) திரு.முரளி சங்கர்,உதவி மக்கள் தொடர்ப்பு அலுவலர் திரு.ரா.ராமசுப்பிரமணியன், மற்றும் வட்டார மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், செவிலியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.