ராதா சுரேஷ்
திருப்பதி
ஆந்திர மாநிலம்
08.06.2023
திருமணக்களை கட்டிய
நடிகர் சிரஞ்சீவியின் இல்லம்
ஹைதிராபாத்தில் நடிகர் வருண் தேஜ்க்கும் நடிகை லாவண்யா திரிபாதிக்கும் நிச்சயதார்த்தம்

சிரஞ்சீவி தம்பி நாகேந்திர பாபு மகனும் நடிகருமான வருண் தேஜ் க்கும் நடிகை லாவண்யா திரிபாதிக்கும் ஹைத்திரபாத்தில் உள்ள நாகேந்திர இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சிரஞ்சீவி குடும்பத்தினர் மட்டுமே நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இவர்கள் இருவரும் ஐந்து வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்கள் இரு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் மோதிரம் மாற்றிக்கொண்டனர். முதன்முறையாக ஸ்ரீனுவைட்லா இயக்கிய ‘மிஸ்டர்’ படத்தில் இணைந்து நடித்தனர்.அதன் பிறகு அந்தரிக்ஷம் என்ற படத்திலும் இருவரும் இணைந்து நடித்தனர்.அப்போது முதல் அவர்கள் காதலித்து வந்தனர்.
. வருண் தேஜ் தற்போது காண்டீவதாரி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் சிவ பிரதாப் இயக்கத்திலும் ஒரு திரைப்படம் நடித்து வருகிறார்.
லாவண்யா திரிபாதி தற்போது தமிழில் அதர்வாவுடன் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும், அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் பேனரில் ஸ்கைலேப் புகழ் விஷ்வக் கண்டேராவ். இயக்கத்தில் ஹாட் ஸ்டார் வெப் சீரியஸ்ஸிலும் நடித்து வருகிறார்.
வருண் லாவண்யாவின் திருமணம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் என தெரிகிறது.இந்த நிகழ்ச்சியில் சிரஞ்சீவி தம்பதிகள், ராம் சரண் தம்பதிகள் அல்லு அர்ஜுன் மற்றும் சிரஞ்சீவியின் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது