கோக்கு மாக்கு

திருப்பதியில் தீவிபத்து..!

 ராதா சுரேஷ்
திருப்பதி
ஆந்திர மாநிலம்
16.06.2023

திருப்பதியில் போட்டோ பிரேம் கடை ஒன்றில் பயங்கர தீ விபத்து   

திருப்பதி இரயில் நிலையம் அருகே உள்ள ஸ்ரீகோவிந்தராஜர்  ஆலய சன்னதி வீதியில்  லாவண்யா போட்டோ பிரேம்  கடையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. மிகவும் நெரிசலான அப்பகுதியில் பக்தர்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் லாவண்யா போட்டோ பிரேம் கடையில் திடீரென தீ பிடித்து எரிந்தது . இதனைக் கண்டு அப்பகுதியில் செல்லும் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதில் உயிர்சேதம் எதுவுமில்லை என்று கூறப்படுகிறது. போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று பணியாற்றி வருகின்றனர். விவரம் இன்னும் வெளியாகவில்லை.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button