ஆன்மீகம்செய்திகள்

வரம் தரும் மரம் வன மகோத்சவம் துளிர் நடும் விழா!

🌐வனமகோத்சவம் முன்னிட்டு காவேரி கூக்குரல் சார்பாக மரம் நடும் திருவிழா

🟢இந்தியா முழுவதும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மக்களிடம் மரம் வளர்க்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் ஆண்டுதோறும் ஜூலை முதல் வாரம் தேசிய வன மகோத்சவம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தேசிய வன மகோத்சவம் ஜூலை 1 முதல் 7 வரை கொண்டாடப்படுகிறது.

🟢இதை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வுகள் தமிழ்நாடு முழுவதும் ஜூலை 1 ஆம் தேதி துவங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 37 மாவட்டங்களில், 136 விவசாயிகளுடைய நிலங்களில் 1,61,133 மரங்கள் நடப்பட உள்ளது.

🟢சுற்றுச்சூழல் மேம்பாடு, மண்வள மேம்பாடு, நதிகளை மீட்டெடுத்தல் போன்ற நோக்கங்களுடன் விவசாயிகளின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் விதமாக செயல்பட்டு வரும் காவேரி கூக்குரல் இயக்கம் செயல்பட்டு வருகிறது. ஈஷா நாற்றுப்பண்ணைகளில் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட விலை மதிப்பு மிக்க டிம்பர் மரங்கள் விவசாயிகளுக்கு 3 ரூபாய்க்கு மானிய விலையில் வழங்கி வருகிறது.

🟢தேக்கு, செம்மரம், சந்தனம், வேங்கை, மலைவேம்பு, மஞ்சள் கடம்பு, ரோஸ்வுட், கருமருது போன்ற 18 வகையான மரங்கள் வழங்கப்படுகிறது. விவசாய நிலங்களில் இம்மரங்கள் நடப்படுவதால் விவசாயி பொருளாதார வளமடைவதோடு மண்ணின் நீர் பிடிப்புத்திறன், நதிகளின் நீர் ஆதாரம் அதிகரிக்கும்.

🟢வனமகோத்சவம் அன்று மட்டுமல்லாது மரம் நடும் திருவிழாவினை உலக சுற்றுச்சூழல் தினம், காந்தி ஜெயந்தி, நதிகளுக்கு புத்துயிர் ஊட்டும் தினம், நம்மாழ்வார் ஐயா நினைவு நாள், நெல் ஜெயராமன் ஐயா நினைவு நாள், மரம் தங்கசாமி ஐயா நினைவு நாள் போன்ற சிறப்பு நாட்களிலும் காவேரி கூக்குரல் நடத்திவருகிறது.

🟢ஈஷா மூலமாக தமிழகம் முழுவதும் 2004 ம் ஆண்டு முதல் 8.85 கோடி மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்து. இதன் மூலம் மரம்சார்ந்த விவசாயத்துக்கு 1,72,600 விவசாயிகள் மாறியுள்ளனர். தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு காவேரி கூக்குரல் 1,01,42,331 மரங்களை நடவு செய்துள்ளது. இந்த ஆண்டு ஒரு கோடியே பத்து லட்சம் மரங்களை நடவு செய்ய இலக்கு நிர்ணயித்து நாற்று உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

🟢காவேரி கூக்குரல் இயக்க களப்பணியாளர்கள் தமிழகம் முழுவதுமுள்ள விவசாயிகளின் நிலங்களுக்கு நேரடியாக சென்று மண்ணின் தன்மை, நீரின் தரம் போன்றவற்றை ஆய்வு செய்து மண்ணுக்கேற்ற டிம்பர் மரங்களை தேர்வு செய்து மரம் நடும் வழிமுறைகளை இலவசமாக வழங்கி வருகின்றனர்.

🟢விவசாயிகளுக்கு மரப்பயிர் சாகுபடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் பெரியஅளவில் 5 சிறப்பு பயிற்சிகளை நடத்தி வருகிறது, அதோடு ஒவ்வொரு மாவட்டத்திலும் வட்டார அளவில் சிறப்பு பயிற்சி வகுப்புகளும் நடத்தபடுகிறது. மேலும் சமவெளி பகுதியில் மரப்பயிர்களின் ஊடே மிளகு மற்றும் மசாலா பயிர்களை சாகுபடி செய்யக்கூடிய வழிமுறைகளை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இதனால் மரவிவசாயிகளுக்கு தொடர் வருமானம் கிடைக்கும்.

🟢வரும் ஜூலை 16 அன்று “சமவெளி நிலங்களில் மிளகு மற்றும் மசாலா பயிர்கள் சாகுபடி சாத்தியமே” என்ற சிறப்பு பயிற்சி மற்றும் கருத்தரங்கள் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள சேந்தன்குடி கிராமத்தில் நடைபெற உள்ளது. இதில் பங்குகொள்ள விரும்பும் விவசாயிகள் 94425 90079 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். மேலும் மரம் சார்ந்த விவசாயம் குறித்த கூடுதல் தகவல்களுக்கு 80009 80009 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button