ஆந்திர மாநிலம் குண்டூர் நகரத்தில் பட்டப்பகலில் ஒருவரிடமிருந்து 10 லட்சத்தை கொள்ளையடித்து
சென்ற திருடர்கள்
ஆந்திர மாநிலம் குண்டூரில் மூன்று ஆண்டுகளாக மிளகு வியாபாரியிடம் குமஸ்தாவாக பணிபுரிந்து வருகிறார் ஹரிபாபு இந்த நிலையில், இன்று நகரத்தில் இருக்கும் பட்டாபிபுரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட மதுரையில் இருக்கும் HDFC வங்கிக்கு வந்து திரும்பி செல்லும் போது, கையில் பணத்தின் பை எடுத்துக்கொண்டு பைக்கில் திரும்பி செல்ல முயன்றார் அந்த நேரத்தில், ஒருவர் ஹரிபாபு இடம் வந்தார். மேலும் உங்கள் பணம் 20 ரூபாய் கீழே விழுந்து என்று கூற ஹரி பாபு பணத்தை பைக் மீது வைத்து அந்த 20 ரூபாய் எடுக்க கீழே குனிந்தான் அந்த சமயத்தில் மற்ற இருவர் பைக் மீது வந்து ஹரிபாபு பைக்கில் வைக்கப்பட்டிருந்த பையை சாதுரியமாக எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடினர்.அந்த பையில் 10 லட்சம் ரூபாய் இருந்ததாக ஹரிபாபு போலீசாரிடம் கூறினார்.
இந்த திருட்டு சம்பவத்திற்கான காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது சினிமா படம் போன்று திருட்டு காட்சிகள் பதிவாகியிருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
அதன் அடிப்படையில் போலீசார் திருடர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்