வனத்துறையினர் சமீபத்தில் வீடுகளில் வளர்க்கபடும் பச்சை கிளிகளை வளர்க்க தடை விதித்து அவற்றை பறிமுதல் செய்தனர் தாய்மார்கள் பலர் தாம் ஆசையாய் வளர்த்த கிளியை பறித்து விட்டார்களே என தேம்பி தேம்பி அழுத காட்சிகள் பார்ப்பவரின் மனதினை உடைய செய்தது பாசபோராட்டம் கைகொடுக்கவில்லை! வனத்துறையின் ஆர்வம் அக்கரை எல்லாம் பொது மக்களை கண்ணீர் வடிக்க செய்வதில்தான் என்பதினை போன்றே அமைந்தது இன்றைய காட்சி தென்காசி மாவட்டத்தின் தலை நகர் புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அரசு பொது மருத்துவமனையின் வளாகத்தில் தடை செய்ததாக கூறப்படும் பச்சை கிளிகளை வைத்து கிளி ஜோசியம் பாத்து வருகிறார்கள் ஏராளமானபேர் பிறக்கும் குழந்தை ஆனா பெண்ணா விபத்தில் கை கால்களை இழந்தவர்கள் எழுந்து நடப்பார்களா என அப்பாவி மக்களின் ஏக்கங்களை கிளிகளை வைத்து ஜோசியம் பார்த்து வருகின்றனர் கிளிகளை வைத்து பிழைப்பு நடத்தும் ஆசாமிகள் இவர்களை வனத்துறையினர் கண்டு கொள்ள வில்லையே ஏண் சட்டமும் சம்பிரதாயமும் சாமானியர்பளுக்கு மட்டும் தான என கேள்வி எழுப்புகின்றனர் அப்பாவி பொதுமக்கள் விசில் செய்திகளுக்காக நவீன் மற்றும் அரசகுமார்
