பாஜக அரசு பாரத மாதாவை கொன்றுவிட்டது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
“பாஜக அரசு மணிப்பூரில் பாரத மாதாவை கொன்று விட்டது” என்று ராகுல் காந்தி கடுமையாக சாடியிருக்கிறார்.
மக்களவையில் பேசிய அவர், “நீங்கள் பாரத மக்களை காப்பவர்கள் இல்லை. நீங்கள் தேசப் பக்தர்களே இல்லை. தேச விரோதிகள். ஆரம்பத்தில் இருந்தே மணிப்பூர் மக்களின் குரலை நசுக்கி விட்டீர்கள்.
மணிப்பூருக்கு நீதி வழங்காவிட்டால் பாரத மாதாவை கொன்றதாகவே அர்த்தம்” என்று இடி முழக்கத்துடன் பேசினார்.
மணிப்பூர் இந்தியாவில்:இல்லையா? என் ராகுல் கேள்வி எழுப்பினார்.
நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது பேசிய ராகுல் காந்தி, மத்திய அரசை சரமாரியாக விமர்சித்தார். அப்போது அவர், “மணிப்பூரை மத்திய அரசு இரண்டாக பிரித்திருக்கிறது. ஏன்? மணிப்பூர் இந்தியாவில் இல்லையா? நான் அங்கு 2 முறை சென்று வந்துவிட்டேன்.

பிரதமர் ஏன் செல்லவில்லை? வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுடன் பேசினேன். பிரதமர் செய்யாததை நான் செய்திருக்கிறேன்” என்று பேசினார்.
