கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் குமார் கட்டி வரும் பங்களா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை காலை 11 மணியிலிருந்து ஈடுபட்டு வந்த நிலையில் – செங்குந்தபுரம் பகுதியில் உள்ள ஆடிட்டர் சதீஷ்குமார் அலுவலகத்தில் சிறிது நேரம் சோதனைக்கு பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் கிளம்பிச் சென்றனர் – ராமகிருஷ்ணபுரம் பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீட்டில் அவரது மனைவி நேரில் ஆஜராகும் படி சம்மன் ஒட்டப்பட்டுள்ளது
கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராம் நகர் பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் அவரது மனைவி பெயரில் கட்டி வரும் பிரம்மாண்ட பங்களா வீட்டில் இன்று காலை 11 மணியளவில் இரண்டு வாகனங்களில் வந்த அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனையை காலை 11 மணக்கு தொடங்கியுள்ளனர்.
தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் பிரம்மாண்ட பங்களா வீட்டில் சோதனை நடைபெற்று வரும் பகுதியிலிருந்து, ஒரு வாகனத்தில் புறப்பட்ட அதிகாரிகள் 4 பேர் செங்குந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள ஆடிட்டர் சதீஷ்குமார் அலுவலகத்தில் சோதனையை தொடங்கி சிறிது நேரத்தில் கிளம்பிச் சென்றனர்.
தொடர்ந்து கரூரில் உள்ள ராமகிருஷ்ணபுரம் பகுதியில் அமைந்துள்ள அசோக்குமார் வீட்டில் அவரது மனைவி நிர்மலாவை நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் ஒட்டி உள்ளனர்.
சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது கரூரில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனையை தொடங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது