மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஸ்ரீராமபுரம் திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் மற்றும் கன்னிவாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலர் நசாருதீன் அவர்கள் தலைமையில் இன்று (24.08.2023) நடைபெற்ற நிகழ்ச்சியில் தர்மத்துப்பட்டி, கோணூர், கன்னிவாடி, அனுமந்தராயன்கோட்டை, குட்டத்துப்பட்டி, திருமலைராயபுரம், சுள்ளெறும்பு, புதுக்கோட்டை, கொண்டமநாயக்கன்பட்டி உள்ளிட்ட அரசினர் மேல்நிலை பள்ளிகளில் பயலும் 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழக மாணவ, மாணவிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுத்தி வருகிறார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கல்வித்துறைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் நிறைவேற்ற அதிக நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் சிவ குருசாமி, முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் சத்தியமூர்த்தி, ஸ்ரீராமபுரம் பேரூராட்சி தலைவர் சகிலா ராஜா, கன்னிவாடி பேரூராட்சி தலைவர் தனலட்சுமி சண்முகம் மற்றும் கட்சி நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் பள்ளி மாணவ மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.