
கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் தனியார் திருமண மண்டபத்தில் முந்திரி ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நடத்திய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் தகுதி வாய்ந்த முந்திரி ஏற்றுமதியாளர்களுக்கு நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ விருதுகள் வழங்கினார். முந்திரி விவசாயிகளுக்கு முந்திரிக்கன்றுகள் கொடுத்து சிறப்பித்தார்.