கரூர் அருகே தனியார் அரசு மகளிர் கல்லூரியில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு மாரியம்மன் பாடலுக்கு மாணவிகள் உற்சாகமாக நடனம் ஆடினர் கொண்டாடினர்.
கேரளாவில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஸ்த நட்சத்திரத்தில் இருந்து திருவோண நட்சத்திரம் வரை 10 நாட்கள் நடைபெறும் ஓணம் பண்டிகை இன்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கரூர் அடுத்த மண்மங்கலம் வட்டம், பண்டுதகாரன் புதூர் தனியார் மகளிர் கல்லூரியில் ஓணம் பண்டிகை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் கோலமிட்டு கேரள பாரம்பரியமான ஜண்டை மேளங்கள் முழங்க, மாணவிகள் வட்டமிட்டு நடனம் ஆடினர்.
அதனை தொடர்ந்து பல்வேறு சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடிக் கொண்டிருந்தபோது, மாரியம்மன் பாடல் ஒலித்ததும் கல்லூரி மாணவிகள் அனைவரும் வேப்ப மரத்திலிருந்து இலைகளை பிடுங்கி உற்சாகமாக நடனமாடி ஓணம் பண்டிகையை கொண்டாடினர். பின்னர் அனைவரும் செல்பி எடுத்தும், குழு புகைப்படம் எடுத்தும் ஓணம் பண்டிகையை சிறப்பித்தனர்.