செய்திகள்

திண்டுக்கல் : கொலை வழக்கில் கைதான 5 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது

திண்டுக்கல்லில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது. திண்டுக்கல் அண்ணா நகர் பகுதியில் கடந்த மாதம் 20-ம் தேதி பட்டறை சரவணன் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ஆசிக்முகமது, முகமதுஇர்பான்(22), முகமதுமீரான்(25), ஷேக்அப்துல்லா(25), சதாம் உசேன்(25) ஆகிய 5 பேர் கைது  செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு S.P.பாஸ்கரன் பரிந்துரையின் பேரில் ஆட்சியர் பூங்கொடி 5 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையிலான போலீசார் 5 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button