சார்பு ஆய்வாளர் தேர்வுக்கு சென்று செல்போனை திருடி மாட்டிக் கொண்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அக்ரஹாரப்பட்டியைச் சேர்ந்தவர் சங்கையா. இவரின் மகள் சற்குணம். இவர் கடந்த 26ஆம் தேதி சார்பு ஆய்வாளர் தேர்வுக்காக பி.எஸ்.என்.ஏ கல்லூரியில் தேர்வு எழுத சென்றுள்ளார்.
தேர்வு முடிந்து வெளியே வந்து தனது பையைப் பார்த்த போது தனது செல்போன் தொலைந்து போனது தெரியவந்துள்ளது. உடனடியாக அங்கு இருந்தவர்களிடம் சற்குணம் கேட்டுள்ளார். அப்போதுதான் அங்கு இருந்த 17பேரின் செல்போன் திருடு போனதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து சற்குணம் ரெட்டியார்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சற்குணத்தின் செல்போனை ஆய்வு செய்த போலீசார் வேடசந்தூர் பகுதியில் சிக்னல் காட்டியுள்ளது. பிறகு விசாரணையில் வேடசந்தூர் குங்கும காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சேர்ந்த சுதா என்பவர் சார்பு ஆய்வாளர் தேர்வு எழுத வந்து செல்போனை திருடி உள்ளது அம்பலமானது.
காவலர் தேர்வுக்கு சென்ற பெண் களவாணித்தனம் செய்து மாட்டிக் கொண்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது