கோவிந்த பேரி சாலை படு மோசம் நடுரோட்டில் மரம் நட முயற்சி கடையம் அருகிலுள்ள, திருமலையப்பபுரம் முதல் கோவிந்தபேரி வரை உள்ள, கோவிந்தபேரி சாலையில், ரவணசமுத்திரம் பகுதியில்,மிகவும் குண்டும் குழியுமாக சாலை உள்ளதால், தண்ணீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.இதனால் அப்பகுதியில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகிறது.இந்த சாலை கடனாநதி, சம்பன்குளம், வீரா சமுத்திரம், மாலிக் நகர், மீனாட்சிபுரம், கோவிந்த பேரி, உள்ளிட்ட பல்வேறு பகுதியில் வசிக்கக்கூடிய மக்கள் பயன்படுத்தக்கூடிய பிரதான சாலையாக உள்ளது. எனவே! இந்த சாலையை உடனடியாக அமைக்க வலியுறுத்தி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் சாலையில் மரம் நடும் போராட்டம் நடத்தப் போவதாக திடீரென அறிவித்தனர். இதனை அறிந்து அப்பகுதிக்கு வந்த கடையம் காவல் நிலைய துணை ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்திருப்பதாகவும், விரைவில் சாலை அமைக்க அதிகாரிகள் உறுதி அளித்துள்ள காரணத்தினால் போராட்டத்தை கைவிடும் படி கேட்டுக் கொண்டார்,இந்த சாலையை போர்க்கால அடிப்படையில், உடனடியாக சரிசெய்யவில்லையெனில், ஒரு வார காலத்தில், மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். போராட்டத்தில்இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட அமைப்புச் செயலாளர்கட்டி அப்துல் காதர்,வீராசமுத்திரம் ஜமாத் தலைவர் காஜா மைதீன், உறுப்பினர் நாகூர் மைதீன், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாவட்ட பொருளாளர் அன்சர், வர்த்தக அணி செயலாளர் பழக்கடை சுலைமான். வீராசமுத்திரம் ஊராட்சி துணைத்தலைவர் நாகூர், சர்தார் அலிகான். உள்ளிட்ட பலர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
