
*வேடசந்தூரில் மில் தொழிலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு*திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜோதிவேல்(65). மில் தொழிலாளி. நேற்று இரவு வேலை முடித்து ஜோதிவேல் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார்.நள்ளிரவில் இவரது வீட்டின் முன்பு பயங்கர சத்தம் கேட்டது. இதனால் ஜோதிவேல் மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் திடுக்கிட்டு எழுந்து பார்த்தனர். அப்போது அவரது வீட்டு முன்பு தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்தது. அதன் அருகே கண்ணாடி பாட்டில்கள் சிதறிக்கிடந்தன. பாட்டிலுக்குள் பெட்ரோலை நிரப்பி அதில் தீ வைத்து வீட்டின் மீது மர்ம நபர்கள் வீசிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்