மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளுக்கு ரூபாய் 1 அல்லது 0.10 பைசா வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது.
பயன் பெறும் பயனாளிகள் வங்கி கணக்கை செக் செய்து கொள்ளவும்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளுக்கு இன்று ரூபாய் 1 அல்லது 0.10 பைசா வங்கி கணக்கில்வரவு வைக்கப்பட்டு உள்ளது.
பயன் பெறும் பயனாளிகள் வங்கி கணக்கை செக் செய்து கொள்ளவும்..
ச தமிழ்நாட்டில் வழங்கப்பட உள்ள ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பாக மெசேஜ் இன்னும் 4 நாட்களில் பயனாளிகளுக்கு அனுப்பப்பட உள்ளது
திட்டம் தொடங்கப்பட்டு அதிகபட்சம் 5 நாட்களில் அதாவது செப்டம்பர் 20ம் தேதி முதல் மாத தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும். நேரடியாக வங்கி கணக்கில் மக்களுக்கு பணம் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து செப்டம்பர் 5ம் தேதிக்குள் இதுவரை விண்ணப்பம் செய்த எல்லோருக்கும் விண்ணப்பங்களை இறுதி செய்து, 1 கோடி பயனர்களை தேர்வு செய்யும் முடிவை தமிழ்நாடு அரசு எடுத்து இருந்தது
அதன்படி செப்டம்பர் 5ம் தேதிக்கு இந்த திட்டத்திற்கு தேர்வானவர்கள் லிஸ்ட் எடுக்கப்பட்டு, அவர்களுக்கு மெசேஜ் மூலம் தகவல் அளிக்கப்படும். திட்டம் தொடங்கும் நாளில் மெசேஜ் மூலம் இவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
செப்டம்பர் 15ம் தேதியில் இருந்து ஒவ்வொருவராக பணம் பெற தொடங்குவார்கள். 1.70 கோடி பேர் விண்ணப்பம் செய்த நிலையில் அதிகபட்சம் 1 முதல் 1.30 கோடி பேருக்கு பணம் அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கான பணம் இன்னும் 6 நாட்களில் கொடுக்கப்படும். இதற்காக விழா எடுத்து பணம் அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கன்னியாகுமரியில் மொத்தம் 2.40 லட்சம் பேர் இதற்கு விண்ணப்பம் செய்தனர். இதில் 20 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன.
தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில்தான் அதிக விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன. இவர்கள் கொடுக்கப்பட்ட விதி வரையறைக்குள் வராத காரணத்தால் அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கலைஞர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் 1000 ரூபாய் பெறுவதற்காக நீங்கள் விண்ணப்பம் அளித்து அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் அதற்கான மெசேஜும் வந்துள்ளது.
இல்லையென்றால் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று மெசேஜ் வந்துள்ளது.
முகாம்களில் விண்ணப்பங்களை கொடுத்தவர்களின் விண்ணப்பங்கள் சரி பார்க்கப்பட்டு பணிகள் முடிந்து வருகின்றன. தேர்வானவர்கள் பெயர்கள் தற்போது லிஸ்டில் கணினி மூலம் பதிவேற்றப்பட்டு வருகின்றது.
இதில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் பட்சத்தில் அதை மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பும் உள்ளது. அதாவது நீங்கள் விண்ணப்பம் கொடுக்கிறீர்கள், அது நிராகரிக்கப்படுகிறது என்றால் அதை மறுபரிசீலனை செய்ய மேல்முறையீடு செய்ய முடியும். உங்களிடம் ஆவணங்கள் எல்லாம் முறையாக இருந்து நீங்கள் தகுதியானவராக இருந்தால் நீங்கள் எளிதாக பரிசீலனை செய்ய முடியும்.
உரிமைத் தொகை:
பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலவர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதையடுத்து கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் கடந்த சில வாரங்களுக்கு முன் நடைபெற்றது. முதற்கட்ட முகாம் ஜுலை 24ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபெற்றது.
ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் முதல் மாத பணம் எப்போது வங்கி கணக்கில் வரும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலவர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார்