VIDEO
தூத்துக்குடியில் திருமணம் முடிந்த 3-நாட்களில் காதல் ஜோடியை வெட்டிகொலை செய்துவிட்டு தப்பிசென்ற மர்ம கும்பலை பிடிக்க 3-தனிப்படைகள் அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவை தொடர்ந்து தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். தூத்துக்குடி முருகேசன் நகர் பகுதியை சார்ந்த வசந்தகுமார் மகன் மாரிசெல்வம்(23)இவர் சிப்பிங் கம்பெணி ஒன்றில் பணியாற்றி வருகின்றார் இவரும் தூத்துக்குடி திருவிக நகர் பகுதியை சார்ந்த கார்த்திகா(23) என்ற பெண்ணும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர் இந்த காதலுக்கு கார்த்திகா தரப்பில் அவரது பெற்றோர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனால் ஒரே பகுதியில் வசித்து வந்த மாரிசெல்வம் குடும்பத்தினர் கார்த்திகா குடும்பத்தின் மிரட்டலின் பேரில் அந்த பகுதியில் இருந்து காலி செய்து முருகேசன் நகர் பகுதிக்கு கடந்த ஓராண்டுக்கு முன்னர்தான் குடியேறி உள்ளனர். இந்நிலையில் கடந்த 3-நாட்களுக்கு முன்பு நடைபெற்ற தேவர்ஜெயந்தி அன்று கார்த்திகா வீட்டை விட்டு ஒடி வந்து மாரிசெல்வத்தை கோவில்பட்டியில் வைத்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் இருவரும் திருமணம் முடித்து மாரிசெல்வம் வீட்டில் அவரது தாய் தந்தையுடன் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர் இந்நிலையில் இந்த திருமணம் முடிந்து 3-நாட்களே ஆகும் நிலையில் வீட்டில் காதல் ஜோடிகள் இருவரும் தனியாக இருந்த நிலையில் மாரிசெல்வம் வீட்டிற்கு 3-இருசக்கர வாகனங்களில் கடுமையான ஆயுதங்களை கொண்டு வந்து வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த மாரிசெல்வம், கார்த்திகா ஆகிய இருவரையும் சராமரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். பின்னர் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரனை-யை முடிக்கிவிட்ட போலீசார் 3-தனிப்படைகள் அமைத்து தப்பிசென்ற குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில் ஒருவரை பிடித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பெண்ணின் உறவினர்கள் இந்த கொலையில் ஈடுபட்டதாக போலீசார் தரப்பில் கூறுகின்றனர். மேலும் தூத்துக்குடி முருகேசன் நகர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்து 3-நாட்களே ஆன காதல் ஜோடியே மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து சராமரியாக வெட்டிகொலை செய்துவிட்டு தப்பிசென்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பேட்டி.ராஜபுஷ்பம்,கொலை நடந்த வீட்டின் அருகே குடியிருக்கும் வீட்டின் பெண்.
Read Next
2 days ago
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாத சாக்கடையை சுத்தப்படுத்திய மாநகராட்சி அதிகாரிகள் -வார்டு கவுன்சிலர் செந்தில் -ன் முயற்சியால் சாத்தியமானது
3 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
3 days ago
திருவுருவப்படத்தை திறந்து வைத்த எம்எல்ஏ
3 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
3 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
3 days ago
தீபமலை உச்சியில் 10-வது நாளாக காட்சியளிக்கும் மகா தீபம்
3 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
3 days ago
மத்திய வன உயிரின குற்றதடுப்பு பிரிவின் தென்மண்டல அதிகாரிகள் தமிழக பகுதிகளில் அதிரடி நடவடிக்கை – 3 யானை தந்தங்கள் கடத்தல் கும்பல்கள் அடுத்தடுத்து கைது
3 days ago
பள்ளியில் தேசிய கணித தின விழா
3 days ago
புத்தாண்டை முன்னிட்டு கன்று விடும் திருவிழா
Back to top button