
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த பனைஓலைபாடி, அல்லியந்தல், நாகப்பாடி ஆகிய கிராம பொதுமக்களுக்கு காரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் புதுப்பாளையம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் இராமநாதன் தலைமையில் புயல் மற்றும் மழைக்கால சிறப்பு மருத்துவ சேவை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டு மருத்துவம் பார்த்துக்கொண்டனர்.