கோக்கு மாக்கு

போர்கால அடிப்படையில் அறுவை சிகிச்சை உயிர் காத்த அரசு மருத்துர்கள்!

அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தென்காசி.
09-04-2024
செவ்வாய்க்கிழமை
இன்று விபத்தில் காயமடைந்த திருப்பூர் பெண்மணிக்கு,
உயிர் காக்கும் உடனடி எலும்பு முறிவு அறுவை சிகிச்சை தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 5 மணி நேரத்தில் வெற்றிகரமாக செய்யப்பட்டது .

தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவக் குழுவினரை, தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும், இணை இயக்குனர் நலப் பணிகள் பிரேமலதா அவர்களும்
சமூக ஆர்வலர்களும் ,மற்றும் பொதுமக்களும் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

  தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர் எனும் இடத்தில் இன்று திருப்பூரில்  இருந்து தென்காசி வரை வந்த பேருந்து லாரி மீது மோதி பெரும் விபத்து ஏற்பட்டது .

விபத்தில் சுமார் 15 க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர்.
இதில் சுமார் 10 பயணிகள் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையிலும் மீதி நோயாளிகள் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அனுமதிக்கப்பட்ட பயணிகளில் திருப்பூரைச் சேர்ந்த 37 வயது உதயா என்ற பெண்ணுக்கு, இடது கால் மற்றும் இடது கைகளில் எலும்புகள் பல துண்டுகளாக உடைந்து சேதம் அடைந்திருந்தது.

தென்காசி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவினர், மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் அவர்களின் வழிகாட்டுதலின்படி பயணி  உதயாவிற்கு உடனடியாக எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்ய தீர்மானிக்கப்பட்டது.

அவருக்கு இன்னுயிர் காப்போம் 48 திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்வதற்கான அனைத்து பரிசோதனைகள் மற்றும் ஏற்பாடுகள் மருத்துவர்களால் செய்யப்பட்டது.

மதியம் 11.30 மணி அளவில் மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின், மது, மயக்க மருத்துவர் நீத்து அடங்கிய குழு வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை செய்தனர்.

நோயாளி முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட வார்டில் நலமுடன் இருக்கிறார்.
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ குழுவினர் துரிதமாக செயல்பட்டு,இன்றைய விபத்தில் காயமடைந்த நோயாளிகளுக்கு சிகிச்சைகளும், மற்றும் உதயா என்ற பெண்மணிக்கு விரைவாக அறுவை சிகிச்சை செய்ய ஒத்துழைத்த அனைத்து மருத்துவர்கள் செவிலியர்கள் பணியாளர்களுக்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொண்டார் .

சுகாதார நலப் பணிகள் இணை இயக்குனர் பிரேமலதா அவர்கள் தென்காசி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு மற்றும் எலும்பு முறிவு  மருத்துவ குழுவினரை பாராட்டி, சிறப்பாக செயல்பட்டு வரும்  தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை நிர்வாகத்திற்கு பாராட்டுக்கள் தெரிவித்தார்.

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று காலை உடனடியாக மருத்துவமனைக்கு வந்து இன்றைய வாகன விபத்தில் காயமடைந்த அனைத்து நோயாளிகளையும் பார்த்து ஆறுதல் கூறினார். பணியில் இருந்த மருத்துவ குழுவினரிடம் வாகன விபத்தில் காயமடைந்த அனைத்து நோயாளிகளுக்கும் சிறப்பாக சிகிச்சை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

  இதைப் பற்றி தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்வின் கூறும்போது தென்காசி மருத்துவமனையில் விடுமுறை தினங்களிலும் அவசர சிகிச்சை பிரிவுகள் முழு அளவில் இயங்கி வருகிறது சிக்கலான பொது அறுவை சிகிச்சைகள் 24 மணி நேரமும், முதலமைச்சரின் இன்னுயிர் காப்போம் திட்டம் மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்  மூலம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த  வசதியை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டார்.
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button