திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆத்தூர் தொகுதி தேர்தல் பணி ஆத்தூர் தாலுகாவில்11-04-2024 இன்று மாலை 5 மணிக்கு இது வரையிலான வாக்காளர் கணினி பெட்டி EVM மிஷின் சரி பார்த்தல் வாக்கு செலுத்துதல் அதாவது ஒரு பெட்டியில் ஆயிரம் வாக்குகள் போட வேண்டும் போட்ட பிறகு அதனை மீண்டும் எந்தெந்த கட்சிக்கு எத்தனை வாக்குகள் போடப்பட்டதோ அதனை மீண்டும் எண்ணி சரிபார்க்க வேண்டும் அதில் வேறு ஏதேனும் சிறு மாற்றங்கள் ஏற்பட்டாலோ அல்லது மிஷின் தவறாக உள்ளதா என சரி பார்த்து அனைத்து கட்சியினரும் ஒப்புதல் கொடுத்த பிறகு அனைத்து வாக்கு பெட்டிகளையும் ஒரு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது.அதற்கு முன்பாக வாக்கு செலுத்தப்பட்ட அனைத்து வாக்குகளும் டெலிட் செய்யப்பட்டது டெலிட் செய்யப்பட்ட பிறகு காலியான மெஷினை எடுத்து பெட்டிக்குள் சரி பார்த்து வைக்கப்பட்டது.
ஆத்தூர் வட்டாட்சியர் வடிவேல் முருகன் அவர்கள் தேர்தல் அதிகாரியாக பணிகளை செய்து வருகிறார்.
பூட்டி சீல் வைக்கப்பட்ட அந்த அறைக்கு காவல்துறை நண்பர்கள் காவலுக்கு நிறுத்தப்பட்டனர்.