திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அடுத்த, மல்லனம்பட்டி அருகே, அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்த, பூ விவசாயிகள் ராசு (43) இதை ஊரைச்சேர்ந்த, காசிராஜன் (39) ஆகிய இருவரும்,
மல்லனம்பட்டியிருந்து இருசக்கர வாகனத்தில் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டுக்கு பூ கொண்டு வந்து கொண்டிருந்தனர். அப்போது, நிலக்கோட்டை அருகே, வத்தலக்குண்டு ரோடு மணியக்காரன்பட்டி பெட்ரோல் பங்கு அருகே, மதுரை அழகுபுரம் முகமது பைசல் என்பவர், கொடைக்கானல் நோக்கி காரில் சென்ற போது, எதிரே வந்த இரு சக்கர வாகனம் மீது மோதிய மல்லனம்பட்டி அருகே, அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்த, பூ விவசாயிகள் ராசு, காசிராஜன் ஆகிய இருவரும், படுகாயம் அடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இரண்டு பேரும் பலியானார்கள். இச்சம்பவம் குறித்து, நிலக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிலக்கோட்டை பகுதியில் பூ விவசாயிகள் இரண்டு பேர் கார்மோதிய விபத்தில் பலியான சம்பவம், இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது