
பள்ளியில் மாதிரி பாராளுமன்ற நிகழ்ச்சிதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணி புனித வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி, பள்ளி மாணவிகளிடையே மாதிரி பாராளுமன்றம் நடத்தப்பட்டது. நிகழ்வில் பள்ளியில் செயல்பட்டு வரும் துறைகளான கல்வித் துறை, விளையாட்டுத் துறை, கலைத் துறை சார்ந்த அமைச்சர்கள் தங்களின் செயல்பாட்டினை அறிக்கையாக சமர்ப்பித்தார்கள். சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளி தாளாளர் டாக்டர் தியாகராஜன் சபாநாயகராக பொறுப்பேற்று அவையை வழி நடத்தினார். பாராளுமன்ற கேள்வி நேரத்தில் மாணவிகள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்களாக பொறுப்பில் உள்ள ஆசிரியர்களும், மாணவிகளும் பதிலளித்தார்கள். முன்னதாக பள்ளி தாளாளர் அருட்சகோதரி தமிழரசி பாராளுமன்ற அவை நிகழ்வுகளை தொடங்கிவைத்தார்.