
கள்ளக்குறிச்சி அடுத்த வரஞ்சரம் காவல் நிலையத்தில் எஸ். பி., ரஜத்சதுர்வேதி நேற்று வருடாந்திர ஆய்வு நடத்தினார்.காவல் நிலையத்தில் பதிவான வழக்குகளின் கோப்புகளை ஆய்வு செய்து, கோர்ட் நடைமுறைகளை கேட்டறிந்தார். நிலுவை வழக்குகள் குறித்த விசாரித்த எஸ். பி., அவைகளை விரைந்து முடித்திட அறிவுறுத்தினார். ஆய்வின்போது, டி.எஸ்.பி., தேவராஜ், இன்ஸ்பெக்டர் ராபின்சன், சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் உடனிருந்தனர்.