தமிழகத்தில் நாளை நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நேற்று முதல் அனைத்து கட்சிகளும் தேர்தல் ஆணைய விதிமுறைப்படி பிரச்சாரத்தை முடித்தனர் இந்நிலையில் நேற்று திண்டுக்கல் மாவட்டம் பெரியகோட்டை பகுதியில் விதிகளை மீறி அதிமுகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி அந்த பகுதிக்கு வந்த முன்னாள் வனத்துறை அமைச்சர் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் திண்டுக்கல் சீனிவாசனின் வாகனத்தை மறித்து திமுகவினர் தங்களது வாகனத்தை நிறுத்தினர் இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது மேலும் வாகனத்தை அகற்றுமாறு ஒன்றிய செயலாளர் ராஜசேகரன் திமுகவினரிடம் கெஞ்சும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது
