திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மினுக்கம்பட்டி காட்டுப் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் சாலையோர வேலியில் சேலையில் சுற்றியபடி பிறந்து சில நாட்களே ஆன பெண் சிசுவை வீசி சென்றுள்ளனர் அப்போது அந்த பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய்கள் அந்த சிசுவை கடித்து குதறியதில் குழந்தை உடல் முற்றிலுமாக சேதம் அடைந்து இறந்துள்ளது இந்நிலையில் அந்த பகுதியில் சென்றவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற கூம்பூர் காவல்துறையினர் குழந்தையின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் சம்பவம் குறித்து கூம்பூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
