திண்டுக்கல் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த கணபதி மகன் வேலுச்சாமி(55) இவர் ஆட்டோ டிரைவர் ஆவார். இந்நிலையில் இன்று வேலுச்சாமி தன் வீட்டில் மின்மோட்டார் சுவிட்சை ஆன் செய்த போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார் இதுகுறித்து திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் மோகன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
