திண்டுக்கல், வடமதுரை அருகே கஞ்சா கடத்துவதாக திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.பிரதீப் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திண்டுக்கல் மதுவிலக்கு டிஎஸ்பி.சுந்தரபாண்டியன் மேற்பார்வையில் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி சார்பு ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் காவலர்கள் திண்டுக்கல் வடமதுரையை அடுத்த அய்யலூர் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்த திண்டுக்கல்லை சேர்ந்த கிங்காங் சுப்பிரமணி(48), மதுபாலன்(31), மதன்குமார்(31), தாமரைக்கண்ணன்(22), மாதவன்(23), ராஜா(24) ஆகிய 6 பேரை மதுவிலக்கு போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 30 கிலோ கஞ்சா கடத்தலுக்காக பயன்படுத்திய ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
