
மூங்கில்துறைப்பட்டு அண்ணா நகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வருவாய்துறை மூலம் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அண்ணா நகர் பகுதியில் வீடுகள் வெள்ளத்தில் அடிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வருவாய்துறை மூலம் 5 கிலோ அரிசி, 1 கிலோ துவரம் பருப்பு, 1 கிலோ சர்க்கரை நிவாரண பொருட்களை ஆர்.டி.ஓ. லுார்துசாமி வழங்கினார். வட்டவழங்கல் அலுவலர் அண்ணாமலை, மண்டலதுணை தாசில்தார் பாலகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன், ஊராட்சித் தலைவர் பரமசிவம், வி.ஏ.ஓ. முருகன் உடனிருந்தனர்.