திண்டுக்கல், ஸ்பென்சனர் காம்பவுண்ட் அருகே முத்துச்சாமி என்பவரிடம் பெண் ஒருவர் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றார் அப்போது அங்கிருந்த 2 வாலிபர்கள் மற்றும் பெண் 3 பேரும் சேர்ந்து கத்தியை காட்டி மிரட்டி 2 1/2 பவுன் செயின் மற்றும் மோதிரம் ஆகியவற்றை பறித்து சென்றது தொடர்பாக நகர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து எஸ்.பி.பிரதீப் உத்தரவின் பேரில் நகர் ASP.சிபின் மேற்பார்வையில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையில் சார்பு ஆய்வாளர் ராஜகோபால் நகர் குற்ற தடுப்பு பிரிவு சிறப்பு ஆய்வாளர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் காவலர்கள் ராதா, முகமதுஅலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சிசிடிவி காவலர்கள் ஜான்,செல்வி சைபர் கிரைம் காவலர்கள் மணிகண்டன், சக்திவேல் ஆகியோர் உதவியுடன் மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட அபிநிஷா(39), வினோத்குமார்(எ) மொந்திவினோத்(27), சிவக்குமார்(22) ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 21/2 பவுன் தங்க நகையை மீட்டு திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்..!
