மழை விட்டாலும் தூரல் விடவில்லை..
இப்படித்தான் போக்குவரத்துதுறையின் செயல்பாடுகள் உள்ளதாக கூறப்படுகிறது !
மக்களோடுமக்களாக பயணிக்கும் காவலர்களும் போக்குவரத்து துறையினரும் ஒருவருக்கு ஒருவர் சண்டையா சமாதானமா என்ற போட்டியில் சமாதானமாக சென்றனர்
பாராட்டுக்கள் !
இன்று அதிகாலை தென்காசி பேருந்துநிலையம் 4 மணிக்கு புறப்பட வேண்டிய ஒன்டூ ஒன் பேருந்து 4.10க்கு கிளம்பி உள்ளதாக கூறப்படுகிறது
பாவூர் சத்திரம் ஆலங்குளம. மாறாந்தை என வழி நெடுகிலும் பேருந்தை நிறுத்தி கன்டக்டர் டிரைவர்களை ஏற்றி இறக்கியும் சென்று கொண்டிருந்தாக கூறப்படுகிறது
குறித்த நேரத்தில் பயணிக்க நினைத்த பயணிகளு்க்கு ஏற்பட்டது பெரிய ஏமாற்றம்
கன்டக்டர் டிரைவர்களும் அரட்டையடித்துகொண்டு போலீசார் பணிந்துவிட்டனர் நம்மிடம் என நேற்றைய சம்பவத்தை நினைவு கூர்ந்து அரட்டையுடன் சென்றுள்ளதாகவும்
சொல்லபடுகிறது
இப்படியாக கலந்துரையாடல்களுக்கு நடுவே பயணித்த ஒருபயணி தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிபவர்
ஒரு நிறுத்தத்தில் முன்பாக கொஞ்சம் இறக்கிவிடுங்கள் பணி நிமித்தமாக செல்கிறேன் என்று கூறியுள்ளாராம் அதற்க்கு கன்டக்டர்
ஏண்..? துரை நடந்து போக மாட்டீவ்களோ…என அடுத்து அடுத்து அர்சனை பொழிந்துள்ளாராம்
பொறுத்து பார்த்த ஆட்சியர் அலுவலக பயணி
நமக்கே இந்தநிலை என்றால் மற்ற பயணிகளுக்கு என்ன நிலையோ என ஆதங்கத்தோடு கிளம்பினாராம்
அனைத்து தடத்திலும் நிற்கும் என்றால்(விதிகளை மீறி)
அதற்கு ஏன் ஒன் டூ ஒன் என்கின்றனர் கேள்வி எழுப்புகின்றனர் பயணிகள்
தென்காசி பணிமனை அதிகாரிகளே கன்டக்டர் டிரைவர் மீது ஏதாவது நடவடிக்கைகள் உண்டா அல்லது தங்களின் ஆதரவு உண்டா..?