
தென் மேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஃபெஞ்சல் புயலாக உருவெடுத்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடலூர் துறைமுகத்தில் 7 ஆம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் கடலூர் மாவட்டத்தில் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.