
கோயம்பேட்டில் தமிழக அரசு அறிவித்துள்ள விதிமுறைகள் படி எவ்வாறு செயல்படுத்துவது கடையில் திறக்கும் முன்பு என்னென்ன வழிமுறைகள் செய்வது அரசின் கோரிக்கைகளை பின்பற்றி எப்படி அமல்படுத்துவது மேற்கொண்டு தொற்று ஏற்படாமல் இருக்க என்னென்ன வழிமுறைகள் செய்வது போன்றவை பற்றி சிறப்பு கூட்டம் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில கூடுதல் பொதுச் செயலாளர் பேராசிரியர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது மண்டலத் தலைவர் ஜோதிலிங்கம் மாவட்டத் தலைவர் எட்வர்ட் மாவட்ட செயலாளர் நீலமேகம் மற்றும் உணவு தானிய வணிக வளாக கூட்டமைப்பின் தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்