கோக்கு மாக்கு

போதை பொருள் விற்ற நடிகை சிக்கியது எப்படி..?

Anna salai.

ராயப்பேட்டை அருகே மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்ய முயன்ற சின்னத்திரை நடிகை கைது, 5 கிராம் போதைப்பொருளை பறிமுதல்

சென்னை ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் இன்று மாலை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர் ‌. அப்போது அங்குள்ள ஒரு வணிக வளாகம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு பெண் நின்று கொண்டிருந்ததை பார்த்த போலீசார் அவரை தீவிரமாக கண்காணித்து வந்தனர் ‌. சிறிது நேரத்தில் அங்கு வந்த இளைஞர் ஒருவர் அந்த பெண்ணிடம் இருந்து பார்சல் ஒன்றை வாங்குவதை பார்த்து போலீஸார் விரைந்து சென்று அவரை சுற்றி வளைத்து அவரது உடமைகளை சோதனை செய்த போது அதில் 5 கிராம் மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் இருப்பதை கண்டு பிடித்தனர்.. இதனை அடுத்து போலீஸார் போதைப்பொருளை பறிமுதல் செய்து அந்த பெண்ணை கைது செய்து அண்ணாசாலை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர் ‌‌.

விசாரணையில் அவர் மேடவாக்கம் பகுதியை சேர்ந்த எஸ்தர்@ மீனா(28) என்பதும் இவர் நடிகர் ஆரியா நடித்த ரெடிபடத்தில் துணை நடிகையாக நடித்துள்ளதும் தெரிய வந்தது ‌‌. மேலும் மீனா பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் ஒன்றில் துணை நடிகையாக நடித்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.. மேலும் எஸ்தர் சினிமா மற்றும் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை அடுத்து தனது பெயரை மீனா என மாற்றிக்
கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.‌.

அதுமட்டுமின்றி நடிகை மீனா சின்னத்திரை நடிகர்கள் மற்றும் இளைஞர் பலருக்கு போதைப்பொருள் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர் போலீஸார் நடிகை மீனா மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்..

இதனை அடுத்து போலீஸார் நடிகை மீனா யாரிடமும் இருந்து போதைப் பொருளை வாங்கினார். இவருடன் தொடர்பில் உள்ள நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button