கடையநல்லூர் பேட்டை பகுதியில் உள்ள முகமதுஅலி என்பவரது நகைக் கடையில் 14 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலி மாயமானதால் பரபரப்பு.
இதையடுத்து, கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், கடைக்கு வந்த ஒருவர் தங்கச் சங்கிலியை திருடியது தெரியவந்தது. இது தொடர்பான புகாரின் அடிப்படையில் கடையநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் வழக்குப்பதிந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை செய்தார். அதில் கருமடையூர் தெற்குத் தெருவைச் சேர்ந்த தங்கராஜ் மகன் பாலமுருகன்(40) என்பவருக்கு தொடர்பிருப்பது தெரியவந்ததும் அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி தங்கச் சங்கிலியை மீட்டனர்