
ரிஷிவந்தியம் பி.டி.ஓ. அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் பிரசவித்த தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை கலெக்டர், எம்.எல்.ஏ. வழங்கினர்.பகண்டைகூட்ரோட்டில் உள்ள ரிஷிவந்தியம் பி.டி.ஓ. அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன், துணை சேர்மன் சௌனம்மாள் அண்ணாதுரை, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், துரைமுருகன், பாரதிதாசன், அசோக்குமார், அய்யனார், கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். ரிஷிவந்தியம் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் நிரஞ்சனா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் பங்கேற்று, ஊட்டச்சத்து குறைபாடுடைய பிரசவித்த தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பி.டி.ஓ.க்கள் துரைமுருகன், ஜெகநாதன், தி.மு.க. மணலுார்பேட்டை நகர செயலாளர் ஜெய்கணேஷ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் உதயா உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கல்பனா நன்றி கூறினார்.